Tuesday, February 3, 2009

பெண் என்னும் உன்னதம் - 4

ஒரு குழந்தை பிறந்ததும் அதன் பெற்றோர் அதற்காக கனவுகளை சேமிக்கத் தொடங்குவது இயல்புதான், ஆனால் அது பெண் குழந்தை என்றால் அவளுக்காக கனவுகள் சேமிக்கப்படுகிறதோ இல்லையோ, நகைகள் சேமிக்கப்படுவது நிச்சயம். ஏன், அப்படி விலை கொடுத்து விற்க அவள் என்ன அவ்வளவா மலிந்து விட்டாள்?

பெண்ணுக்காக என்று சேர்க்கப்படுவது எல்லாமே அவளது கணவனுக்காகவே ஒழிய அவள் கனவுகளுக்காக அல்ல. அவளுக்காக அவள் சேர்த்து வைப்பது என்ன? நம் சிந்தனையில் தோன்றாத கேள்வி தான், அவளுக்கும் கனவுகள் உண்டு, அவளும் சிரிப்பாள், அவளும் ரசிப்பாள், சிந்திப்பாள் இவ்வளவு ஏன் அவளும் ரத்தமும் சதையும் கலந்து செய்த ஒரு சகமனுஷிதான். ஞாபகம் இருக்கிறாதா? இந்தக் கேள்வி அவளுக்கும் சேர்த்து தான்.

இங்கே பெண்ணின் திருமணம் என்பது அவளது வாழ்வின் ஒரு பகுதியாய் பார்க்கப்ப‌டுவதை விட அவளைப் பெற்றோரின் பணி நிறைவு விழாவாகத்தானே கொண்டாடப்படுகிறது. குழந்தை பெண்ணாகப் பிறந்து விட்டால் அவளது திருமணம் அவளைப் பெற்றோரின் கடமையாக மாறிப்போகிறது.

ஒரு சுவாரசியமான கதையின் முக்கியமான சில பக்கங்களைக் கிழித்து விட்டு அதைப் படிப்பது எப்படி இருக்குமோ அப்படித்தான் ஆகிவிட்டாள் அவள்.அவள் பிறந்த உடனே அவளது கதையின் இனிமையான அத்தியாயங்கள் கிழிக்கப்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு பெண்ணின் கதையையும் அவளைப் பெற்றோரும் சுற்றோரும் அவளின் திருமண வாழ்க்கை என்ற அத்தியாயத்திலிருந்தே எழுதுகிறார்கள்.

இங்கே அவழுக்கு மட்டும் தான் அந்த சிறப்பு, அவளுடைய டைரியின் பக்கங்களில் அவளின் வாழ்க்கைக் குறிப்புகளை எத்தனையோ பேர் எழுதிவிட்டனர், அது எத்தனையோ கையெழுத்துக்களால் நிரம்பியிருக்கிறது, எவ்வளவோ தேடியும் அவள் கையெழுத்தை மட்டும் காணவில்லை, இன்னும் தேடிக்கொண்டேதான் இருக்கிறேன் நம்பிக்கையுடன், அவள் எழுதுவதை இன்னும் துவங்கவேயில்லை போலும்.

கிழிக்கப்பட்ட பக்கங்கள் இன்னும் நிறையவே உள்ளன, அவைகளை படித்து விட்டு வாருங்கள், இனிமேலாவது கிழிக்காமல். மேலும் பேசுவோம்...

6 comments:

Rain said...

mahci superb da, i really admire ur thinking on this topic

கார்த்திக் said...

Thanks machi

Yes.Kay said...

Marana adi da :) melum pesa kathirukum un mudhal rasigan - Senthi

கார்த்திக் said...

Kandippa mama, innum adhigam pesuvom

Rain said...

Medai pechchai mattum pona pennin unnatham mudhal murayaga unarapadukirathu!!!

En vazhththukkal nanbanae...

Senthil Kumar Vasudevan said...

கார்த்திக்,

சற்றுப் பொறுமையாகவே சுற்றிவர ஆரம்பித்திருக்கிறேன்.. நல்ல தொகுப்பு..

இந்த வரிகளைப் படிக்கையிலே உங்களின் flickr படம் வந்ததில் சிறு தடுமாற்றம்.. முரணாகவும் தோன்றியது..

ஆனால் அது பெண் குழந்தை என்றால் அவளுக்காக கனவுகள் சேமிக்கப்படுகிறதோ இல்லையோ, நகைகள் சேமிக்கப்படுவது நிச்சயம்

படம்